சிவகாசி கல்லூரியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 24th March 2019 12:41 AM | Last Updated : 24th March 2019 12:41 AM | அ+அ அ- |

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வெம்பக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் சௌந்திரபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். தாளாளர் ஆர்.சோலைச்சாமி ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். முதல்வர் கே.கணேசன் கல்லூரி கொடியை ஏற்றினார். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சௌந்திரபாண்டியன் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
கல்லூரி இயக்குநர் விக்னேஷ்வரி சமாதானப் புறாக்களை பறக்க விட்டார். இதில் ஓட்டப் போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சௌந்திரபாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்.