Enable Javscript for better performance
ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச பயிற்சி  வகுப்புகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வு: இலவச பயிற்சி  வகுப்புகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக். பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புக்களுக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
    இதற்கு  அப் பள்ளியின் தாளாளர் காஜா மைதீன் தலைமை வகித்தார். பள்ளியின் பொருளாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான மு.சிக்கந்தர், செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற பேராசிரியர் ரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார். 
    இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ள ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளை அணுகும் விதம் குறித்து விளக்கமளித்தனர்.
    இதைத் தொடர்ந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai