Enable Javscript for better performance
சாத்தூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் பகுதியில் தொடரும் மணல் திருட்டு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 28th March 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் , சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    சாத்தூர் மற்றும் வெம்பகோட்டை பகுதியில் உள்ள வைப்பாற்றில் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. வெம்பகோட்டை வைப்பாற்றில் கோட்டைபட்டி, கோபாலபுரம், சங்கரநத்தம் உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆற்றின் இரு கரைப் பகுதிகளிலும் அமைந்துள்ள சுமார் 110 கிணறுகள் நீரின்றி வறண்டு விட்டதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    மேலும் ஆற்றின் குறுக்கே 10 உறைகிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் கோட்டைபட்டி, ஏழாயிரம்பண்ணை, வல்லம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந் நிலையில், தற்போது இப்பகுதியில் இடைவிடாமல் நடைபெறும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து உறை கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.
    இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    எனவே இப்பகுதியில் தொடரும் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai