Enable Javscript for better performance
சிவகாசியில் மதிமுக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசியில் மதிமுக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ஆலோசனை

    By DIN  |   Published on : 28th March 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் மதிமுக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர்  புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திற்கு மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். 
    கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேசியது: 
    முன்பு சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, வைகோ இதில் வெற்றி பெற்று, இத் தொகுதிக்கு, மஞ்சள் காமலை தடுப்பூசி முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கான அறுவை சிகிச்சை முகாம் உள்ளிட்டவைகளை நடத்தினார்.
    அவர் சிறப்பாக பணியாற்றியதால், மக்களவைத் தொகுதி உறுப்பினர் என ஒருவர் உள்ளார் என்பது மக்களுக்கு தெரியவந்தது.  நான் இந்த தொகுதியில் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றேன். 
    இத்தொகுதியில் தண்ணீர் மற்றும் தொழில் வளர்ச்சி பிரச்னை உள்ளது. மத்தியஅரசு நினைத்தால் இப்பகுதியில் உள்ள தொழில் சிறப்பாக நடைபெறும். 
    இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறும். நான் இத் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் சேவையாற்றுவேன். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
    இதில் மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.ஞானதாஸ், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai