Enable Javscript for better performance
"திமுக வெற்றி பெற்றால் சாத்தூர்  குடிநீர் பிரச்னை இல்லாத நகரமாக மாறும்'- Dinamani

சுடச்சுட

    

    "திமுக வெற்றி பெற்றால் சாத்தூர்  குடிநீர் பிரச்னை இல்லாத நகரமாக மாறும்'

    By DIN  |   Published on : 28th March 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆறு மாதத்தில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாகக்  கொண்டு வரப்பட்டு தண்ணீர் பிரச்னை இல்லாத நகராக சாத்தூர் மாற்றப்படும் என 
    திமுக வேட்பாளர் சீனிவாசன் தெரிவித்தார்.
    விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் ஆலோசனை மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தனியார் மஹாலில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார்.
    சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சீனிவாசன் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  மாணிக்கம் தாகூர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசியது:
    சாத்தூர் தொகுதியில் கடந்த இரண்டு முறை ஆட்சியிலிருந்தவர்கள் எவ்வித பணிகளும் 
    செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் கூட தற்போது பணிகள் முழுமை பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
    எனவே, திமுக சார்பில் நிறுத்தபட்டுள்ள சீனிவாசன் வெற்றி பெற்றால் ஆறு மாதத்தில் சாத்தூர் நகருக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் முழுமையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திமுக வேட்பாளர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
    இதில் மாணிக்கம் தாகூர் பேசுகையில், என்னை வெற்றி பெறச் செய்தால் நாடு முழுவதும் ஒரே ஜிஎஸ்டி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்றார்.
    திமுக வேட்பாளர் சீனிவாசன் பேசுகையில்: 
    திமுக வெற்றி பெற்றால் சாத்தூர் நகரம் குடிநீர் பிரச்னை இல்லாத நகராக மாற்றப்படும். அனைவரும் வாக்குகள் கேட்டுச் செல்லும் போது திமுக ஆட்சியில் முன்பு செய்த திட்டங்கள், சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். மற்ற வேட்பாளர்களை பற்றி குறைகள் கூறி வாக்கு சேகரிக்க வேண்டாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai