Enable Javscript for better performance
திருச்சுழி அருகே சத்துணவுக் கூடத்திற்கான  14 அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சுழி அருகே சத்துணவுக் கூடத்திற்கான  14 அரிசி மூட்டைகள் பதுக்கியவர் கைது

    By DIN  |   Published on : 28th March 2019 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நல்லாங்குளம் கிராமத்தில் சத்துணவுக் கூடத்திற்கான 14 மூட்டைகள் அரிசியைப் பதுக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளம் கிராமத்தில் தேநீர்க் கடை நடத்தி வருபவர் ராமசாமி மகன் திருமால் (62). இந்நிலையில் புதன்கிழமை திருமாலின் வீட்டில் அரசு முத்திரையுடன் கூடிய  14  அரிசி மூட்டைகள் இறக்கப்படுவதைக் கண்ட அக்கிராமத்து மக்கள் உடனடியாக பரளச்சி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனராம். 
    இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் திருமாலின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சத்துணவுக் கூடங்களுக்கு வழங்குவதற்கான தலா 50 கிலோ எடையுள்ள 14 அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    உடனடியாக அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து விருதுநகர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். 
    இது தொடர்பாக திருமாலை கைது செய்த பரளச்சி போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai