Enable Javscript for better performance
நிர்மலாதேவி வழக்கு விசாரணை ஏப்ரல் 22 -க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீதான வழக்கை ஏப்ரல் 22க்கு ஒத்தி வைத்து  ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
    அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியை நிர்மலாதேவி, அக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சுமார் ஓராண்டு சிறை வாசத்திற்கு பின்னர் மூவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜாமீனில் வெளியே வந்த பின்னர் முதன் முறையாக நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்கு ஆஜரானார். மேலும் முருகன், கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினர். 
    இதையடுத்து இவ் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.லியாகத்அலி, வழக்கு விசாரணைக்குரிய ஆவணங்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இருப்பதால், விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai