Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்டம், தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ராஜபாளையத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு  நடைபெற்றது.
    தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, இக் கூட்டத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ். எம். குமார் பேசியது: 
    தேர்தலில் வெற்றி பெற கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள கட்சியின் செயல் வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 40 வாக்குகள் பெற உழைத்தாலே போதும். ராஜபாளையத்தில் திமுக கூட்டணி 1.5 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறலாம் என்றார்.
    கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது:  18 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். அத்துடன் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 
    ராஜபாளையத்திற்கு புற வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படும் என்றார். இதில், எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai