Enable Javscript for better performance
ராஜபாளையம் அருகே வாகனச் சோதனையில் ரூ. 3 .18 கோடி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே வாகனச் சோதனையில் ரூ. 3 .18 கோடி பறிமுதல்

    By DIN  |   Published on : 28th March 2019 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மற்றும் ராஜபாளையத்தில் புதன்கிழமை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 3 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ராஜபாளையம் அருகே தேவதானம் அரசு விதைப் பண்ணை அருகே தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜபாளையம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து 
    ஏ.டி.எம்.  இயந்திரத்தில் நிரப்புவதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ. 1 கோடியே 50 லட்சம் இருப்பது தெரியவந்தது. ஆனால் வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்வதற்கான எந்த ஆவணங்களும் இல்லாத காரணத்தினால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    இதேபோன்று அசையா மணிவிளக்கு பகுதியில் தேர்தல் அதிகாரி பெருமாள்சாமி தலைமையிலான பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரத்தை முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள், ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணத்தை சார்நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.  
    விருதுநகரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
    விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் மகன் சோமசுந்தரம் (43). இவர் தன்னிடம் இருந்த பணம் ரூ. 2 லட்சத்தை விருதுநகரில் உள்ள வங்கி கணக்கில் செலுத்துவதற்காக புதன்கிழமை காரில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது அவரது காரை, ஆர்.ஆர். நகர் அருகே காமராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். அதில், ரூ. 2 லட்சம் பணம் இருப்பது தெரிந்தது. ஆனால், அதற்குரிய எந்த ஆவணங்களும் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், விருதுநகர் வட்டாட்சியர் சீனிவாசனிடம் ஒப்படைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai