Enable Javscript for better performance
விருதுநகரில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க கோலம் வரைந்த நகராட்சி நிர்வாகம்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க கோலம் வரைந்த நகராட்சி நிர்வாகம்

    By DIN  |   Published on : 28th March 2019 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்ட மைய நூலகம் எதிரே குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில், இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த இடங்களில் கோலங்கள் வரைந்துள்ளனர். 
     விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அமைந்திருக்கும் பகுதியில் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. மேலும், சிவகாசி அருப்புக்கோட்டை, சாத்தூர் பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் உள்பட பிற வாகனங்கள் அனைத்தும் இவ்வழியே வந்து செல்லும். இந்நிலையில், மையநூலகம் எதிரே உள்ள பகுதியில் குப்பைத் தொட்டி இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் கொட்டி வந்தனர். 
    இதனால் அப்பகுதியில் உள்ள வாருகாலில் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால், மழை நேரங்களில், குப்பைகளுடன் கழிவு நீரும் சாலையில் கலந்து ஓடும். இதன் காரணமாக மாவட்ட மைய நூலகத்திற்கு போட்டி தேர்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்காக வரும் வாசகர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. 
    இந்நிலையில், அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தினர், மீண்டும் யாரும் அந்த இடத்தில் குப்பைகளை 
    கொட்டாதவாறு கோலங்கள் வரைந்துள்ளனர். மேலும், இப்பகுதியில் யாரும் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai