Enable Javscript for better performance
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்து உயிருக்கு போராடும் காட்டெருமை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்து உயிருக்கு போராடும் காட்டெருமை

    By DIN  |   Published on : 28th March 2019 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல்-கோவிலாறு வனப் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த காட்டெருமை கால் முறிந்து உயிருக்கு போராடி வருகிறது. 
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல்-கோவிலாறு  அணைப் பகுதியை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான யானை, காட்டெருமை, மான், மிளா உள்ளிட்ட  வன விலங்குகள் உள்ளன. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு, அருகில் உள்ள தனியார் தோப்புகளுக்கு  வர தொடங்கியுள்ளன. 
    இந்நிலையில் இப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த காட்டெருமை ஒன்று அணைப்பகுதியில் இருந்து கீழே இறங்கும் போது,  தவறி விழுந்து, கால் எலும்பு முறிந்தது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் செவ்வாய்க்கிழமை முதல் காட்டெருமை உயிருக்கு போராடி வருகிறது. இது குறித்து தகவல் அளித்தும் காட்டெருமையை காப்பாற்ற வனத்துறையினர் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என  அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.  எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காட்டெருமையை காப்பாற்ற வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai