பாலவநத்தம் அருகே சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அருகே சேதமடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலவநத்தம்- இருக்கன்குடி  சாலையில் உள்ள எஸ்.கே. பசும்பொன்புரம் கிராமத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக காலை நேரங்களில் வேலைக்காக பேருந்தில் தொழிலாளர்கள் செல்கின்றனர். 
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராம பேருந்து நிறுத்தத்தில் கட்டப்பட்ட நிழற்குடையின் தரைத்தளம் மற்றும் உட்காரும் இடம் முற்றிலும் சேதமடைந்து விட்டது.இதனால் பகல் நேரங்களில் வெளியூர்களுக்கு செல்ல வரும் போது மக்கள் நிழற்குடைக்குள் உட்கார முடியாமல் வெயிலில் காத்திருப்பதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com