விருதுநகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி
By DIN | Published On : 06th May 2019 12:58 AM | Last Updated : 06th May 2019 12:58 AM | அ+அ அ- |

விருதுநகர் பஜார் பகுதியின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால், அவ்வழியே பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வர முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் தற்போதுள்ள பஜார் பகுதி கன்னியாகுமரி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இவ்வழியாக தற்போது அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது என்றாலும், பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும், சாலையின் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் உள்ளஆக்கிரமிப்புகளையும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.