முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
காசநோய், ஹெச்ஐவி கண்டறிய நடமாடும் பரிசோதனை முகாம்: விருதுநகரில் தொடக்கம்
By DIN | Published On : 15th May 2019 06:58 AM | Last Updated : 15th May 2019 06:58 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டத்தில் நவீன வாகனத்தின் மூலம் காசநோய் மற்றும் ஹெச்.ஐ.வி. நோய்த் தொற்றை கண்டறியும் நடமாடும் பரிசோதனை முகாம் தொடங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்ட காசநோய் மையமும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகும் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன.
இதற்கான நவீன கருவிகள் அடங்கிய வாகன பயன்பாட்டை, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மனோகரன், மருத்துவ கண்கணிப்பாளர் (பொ) முருகேசன், துணை இயக்குநர் (காசநோய்) செல்வராஜ் ஆகியோர் திங்கள்கிழமை மாலை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
மாநில காசநோய் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் காசநோய் அறிகுறிகளுடன், அதாவது இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்து
சளி, இருமல் மற்றும் மாலைநேர காய்ச்சல், பசியின்மை, எடைகுறைதல், நெஞ்சுவலி போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மணி நேரத்தில் முடிவுகள் கண்டறியப்பட்டு உடனே காச நோய்க்கான சிகிச்சை வழங்கப்படும்.
மே 18 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு இந்த வாகனம் செல்லும். எனவே, சளி, காய்ச்சல் பிரச்னைகள் உள்ளவர்கள் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம் என சுகாதர பணிகள் இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் அய்யனார் மற்றும் மாவட்ட காசநோய் அலுவலர்கள் அமிர்தலிங்கம், ரகுராம், ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.