முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
By DIN | Published On : 15th May 2019 07:00 AM | Last Updated : 15th May 2019 07:00 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
விருதுநகர் அருகே உள்ள வி.சொக்கலிங்காபுரத்தில் பாண்டியம்மாள் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் சீனி வெடி, கேப் வெடிகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வெடி மருந்து கலவை செய்யும் அறையின் கதவை, மீனம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி வினோத்குமார் (30) பூட்டினாராம். அப்போது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறையின் கதவு உடைந்து விழுந்து வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது.
அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.