முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
லாட்டரி விற்பனை செய்தவர் கைது
By DIN | Published On : 15th May 2019 07:02 AM | Last Updated : 15th May 2019 07:02 AM | அ+அ அ- |

ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பேருந்து நிலையத்தில் போலீஸார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்தனர். அவரிடம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் தளவாய்புரம் தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவரது மகன் பால்பாண்டியன் (48) என தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.