சுடச்சுட

    

    ஒரு கி.மீ. முன்பே பேருந்துகள் நிறுத்தப்படுவதால் சதுரகிரி செல்லும் பக்தர்கள் அவதி

    By DIN  |   Published on : 17th May 2019 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தாணிப்பாறையில் 1 கி.மீ. க்கு முன்னரே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
      ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வத்திராயிருப்பு ஒன்றியம் சதுரகிரி மிகவும் பிரசித்திபெற்ற சிவதலம் ஆகும்.  இங்கு அமாவாசை, பெளர்ணமி நாள்களில் பொதுமக்கள் பிற மாவட்டங்களிலிருந்து சிவதரிசனத்துக்கு திரளாக வருகிறார்கள்.  அப்படி வரும் மக்கள் அரசுப் பேருந்தில் தாணிப்பாறை செல்லும் போது ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே இறக்கி விடுகிறார்கள். காரணம் கேட்ட போது பேருந்தை திருப்ப வழியில்லை என ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே  மலையடிவாரம் போய் சுற்றி வந்த சுற்றுப்பாதை, கடைகள் மற்றும் தனிநபர் ஆக்கிரமிப்பால் செல்ல முடியவில்லை. அதற்கும் கீழ்பகுதியில் பேருந்தை திருப்பப் பயன்படுத்திய இடத்தை வனத்துறை வேலியிட்டு மறைத்துள்ளனர். இதனால் அரசுப் பேருந்து மலையடிவாரம் வரை செல்ல முடியவில்லை. இதனால் பெரும்பாலான வயதான பயணிகள் நடந்து வந்து பேருந்தில் ஏற சிரமப்பட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ கட்டணத்தை அதிகம் வசூல் செய்வதால் செய்வதறியாது பயணிகள் தவிக்கிறார்கள். 
    எனவே ஆக்கிரமிப்பை அகற்றி பயணிகள் சிரமமின்றி பேருந்தில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர் சு.தங்கவேல் வியாழக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai