Enable Javscript for better performance
சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து

    By DIN  |   Published on : 17th May 2019 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் அருகே மின்னல் தாக்கியதில் 2 பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு தயாரிக்கும் அறைகள் சேதமடைந்தன.
     விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சிந்தபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் தாயில்பட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கி ஒரு அறையில் மட்டும் வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 
    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
     மேலும் இதே போன்று சிந்தபள்ளி கிராமத்தில் உள்ள வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு அறை தரைமட்டமானது. இரண்டு அறைகள் சேதமடைந்தன. இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்விரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்திலும் பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்று விட்டதால் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்பட வில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai