சுடச்சுட

    

    விருதுநகர் மேலரத வீதியில் வழிந்தோடும் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் அவதி

    By DIN  |   Published on : 17th May 2019 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மேலரத வீதியில் பாதாளச் சாக்கடை தொட்டியில் ஏற்பட்ட அடைப்பால் வெளியேரும் கழிவுநீர் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
     விருதுநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக மேலரத வீதி உள்ளது. இவ்வழியே முக்கிய திருவிழாக்களின் போது சுவாமி நகர் வலம் வருதல் மற்றும் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த வழியாக கனரக வாகனங்கள் மட்டுமல்லாது, இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. 
    இந்நிலையில், மேலரத வீதி விநாயகர் கோயில் தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. சிறிதளவு மழை பெய்தாலும் இப்பகுதியில் கழிவுநீர் செல்வது தொடர் கதையாக உள்ளது. ஏற்கெனவே பாதாளச் சாக்கடை தொட்டி அமைக்கும் போது, தற்காலிக அடைப்பு ஏற்படுத்தி இருந்தனர். அந்த அடைப்பை எடுக்காததால், இப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை தொட்டியில் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதனால், அப்பகுதியில் குடியிருப்போர் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
     மேலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பாதாளச் சாக்கடைதொட்டியில் உள்ள தற்காலிக அடைப்புகளை விரைவில் அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai