அப்பைநாயக்கன்பட்டியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

விருதுநகர் அருகே அப்பைநாயக்கன்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணியில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட

விருதுநகர் அருகே அப்பைநாயக்கன்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணியில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தார் ஊற்றாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  
 பாலவநத்தம்- இருக்கன்குடி செல்லும் வழியில் அப்பைநாயக்கன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் சாலை மேடுபள்ளமாக இருந்ததால், சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதில், ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில், தார் ஊற்றப்பட வில்லை. 
    இதனால், அவ்வழியே வாகனங்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் வீட்டருகே விளையாட செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயமடைவதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, பாதியில் நிற்கும் இச்சாலையை முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com