முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம், சிவகாசியில் மழை
By DIN | Published On : 18th May 2019 07:49 AM | Last Updated : 18th May 2019 07:49 AM | அ+அ அ- |

ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது.
கோடை காலம் தொடங்கியது முதல் ராஜபாளையத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால், முதியோர்கள், சிறுவர்கள் பகலில் வெளியே வருவதை தவிர்த்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், மாலை 5.30 மணி முதல் சிறு சாரலாக ஆரம்பித்து, லேசான மழையாக பெய்யத் தொடங்கியது.
தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளிலும் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சிவகாசி: சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணி முதல் 5.20 மணி வரை மழை பெய்தது.இதனால், சிவகாசி-திருத்தங்கல் சாலை உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.