சிவகாசி, இருக்கன்குடி, அருப்புக்கோட்டை பகுதிகளில் மே 18 மின்தடை
By DIN | Published On : 18th May 2019 07:50 AM | Last Updated : 18th May 2019 07:50 AM | அ+அ அ- |

சிவகாசி, இருக்கன்குடி மற்றும் அருப்புக்கோட்டை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (மே 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாரைப்பட்டி துணை மின்நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும், பாரைப்பட்டி, விஸ்வநத்தம், ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையப் பகுதிகள்.
செவல்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து விநியோகம் பெறும் செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, இனாம் மீனாட்சிபுரம், துலுக்கன்குறிச்சி.
வெம்பக்கோட்டை துணை மின்நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும் வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, பனையடிபட்டி.
சிவகாசி அர்பன் துணை மின்நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும் கண்ணா நகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரத வீதி, வேலாயுதம் சாலை.
சாட்சியாபுரம் துணை மின்நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும் சாட்சியாபுரம், தொழில்பேட்டை, போலீஸ் காலனி, அய்யப்பன் காலனி, சித்துராஜபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல்1 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.
இதேபோல், நென்மேனி துணை மின் நிலையத்திருந்து மின் விநியோகம் பெறும் நென்மேனி, இருக்கன்குடி, கோசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என, சிவகாசி மின்வாரியச் செயற்பொறியாளர் டி. முரளிதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்துக்குள்பட்ட அருப்புக்கோட்டை, தமிழ்ப்பாடி, பந்தல்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட அருப்புக்கோட்டை நகர், பாளையம்பட்டி, கல்குறிச்சி, ஆத்திப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழ்ப்பாடி துணை மின்நிலையப் பகுதிகளான தமிழ்ப்பாடி, இலுப்பையூர், திருச்சுழி, பனையூர், ஆனைக்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.
பந்தல்குடிதுணை மின்நிலையப் பகுதிகளான பந்தல்குடி, வேலாயுதபுரம், ஆமணக்குநத்தம், கொப்புசித்தம்பட்டி, சின்னதும்மக்குண்டு, வதுவார்பட்டி, சேதுராஜபுரம், சுக்கிலநத்தம், மீனாட்சிபுரம், குருந்தமடம், செட்டிக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் பி. முத்தரசு தெரிவித்துள்ளார்.