விருதுநகர் மாவட்ட ஜூனியர் பூப்பந்து அணி மே 25 இல் தேர்வு
By DIN | Published On : 20th May 2019 07:24 AM | Last Updated : 20th May 2019 07:24 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மாநில அளவிலான "ஜூனியர்' ஆண், பெண்களுக்கான பட்டய போட்டியில் பங்கேற்க விருதுநகர் மாவட்ட "ஜூனியர்' பூப்பந்து அணி தேர்வு மே 25 இல் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட பூப்பந்தாட்ட கழகத் தலைவர் முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழ்நாடு மாநில அளவிலான "ஜூனியர்' ஆண்கள், பெண்களுக்கான பட்டயப் போட்டிகள் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள உள்ள விருதுநகர் மாவட்ட "ஜூனியர்' பூப்பந்து அணி தேர்வு, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் மே 25 ஆம் தேதி காலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரர், வீராங்கனைகள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராகவோ அல்லது பள்ளி, கல்லூரிகளில் படிப்பவராகவோ இருக்க வேண்டும்.
மேலும், வீரர்கள் 02.01.2000 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றுகளை தேர்வின் போது கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 98439-12012 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.