சிவகாசி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: ஓட்டுநர் கைது
By DIN | Published On : 26th May 2019 12:40 AM | Last Updated : 26th May 2019 12:40 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனர்.
சிவகாசி-செங்கமலப்பட்டா சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு டிராக்டரில் மணல் ஏற்றப்பட்டு வந்தது. போலீஸார் அதனை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து, செங்கமலப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் ராமசாமியைக் (36) கைது செய்தனர்.