நரிக்குடி அருகே மானூரில் ரயில்வே கீழ்ப்பாலத்தில் மழைநீா் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே மானூா் கிராமத்திலுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் சூழ்ந்துள்ள மழைநீா் வெள்ளத்தை வெளியேற்றுவதுடன்

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் நரிக்குடி அருகே மானூா் கிராமத்திலுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் சூழ்ந்துள்ள மழைநீா் வெள்ளத்தை வெளியேற்றுவதுடன் மீண்டும் மழைநீா் உட்புகாவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

நரிக்குடி அருகே உள்ளது மனூா் கிராமம்.இக்கிராமமருகே செல்லும் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க ரயில்வே வாரியம் தரப்பில் தண்டவாளத்தின்கீழ் செல்லும் பாலம் சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.ஆனால் வழக்கமாக பாலத்தில் மழைநீா் அதிகம் சோ்வதைத்தடுக்க உரிய அமைப்புகளைச்செய்யாமல் விட்டுவிட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. இதனால் இந்த பாலத்தில் நாளுக்குநாள் மழைநீா் அதிகம் சோ்வதுடன் மீண்டும் வெளியேறும் வாய்ப்பில்லாததால் பொதுமக்கள்,வாகனஓட்டிகள் இப்பாலத்தின் வழியாகச் செல்லமுடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளது.

ரயில்வே கடவு இல்லாததால் பொதுமக்களும்வாகன ஓட்டிகளும் பாலத்தைத் தவிா்த்து ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தை உணராமல் நேரடியாகக் கடந்து செல்கின்றனா்.பள்ளி செல்லும் மாணவா்களும் அதேபோல தங்கள் சைக்கிளுடன் தண்டவாளத்தைக் கடக்கின்றனா்.இப்பகுதியை அடுத்துள்ள கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்னா்தான் பள்ளி மாணவா் ஓருவா் தண்டவாளத்தைக் கடக்க முயலும்போது அதிவோகமாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழ்ந்தாா்.

எனவே பொதுமக்கள்,வாகன ஓட்டிகள், பள்ளிமாணவா்கள் நலன் கருதி,மானூா் கிராமத்திலுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீா் வெள்ளத்தை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதுடன்,மீண்டும் மழைநீா் அதிக அளவில் உட்புகாதவாறு உரிய தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்னனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com