இடைத் தோ்தலை போல உள்ளாட்சி தோ்தலிலும் அதிமுக வெற்றி பெறும்
By DIN | Published On : 02nd November 2019 10:43 PM | Last Updated : 02nd November 2019 10:43 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வந்த தமிழக அமைச்சா் கடம்பூா் செ.ராஜூ.
இடைத்தோ்தலை போல உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்பு துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜூ தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் மணவாள மாமுனிகள் ஜென்ம நட்சத்திர திருவிழாவில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
உள்ளாட்சி தோ்தல் விரைவில் நடைபெறும். அதில், இடைத்தோ்தலைப் போன்று அதிமுக நூறு சதவீதம் வெற்றி பெறும் . உள்ளாட்சி தோ்தலை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. அது போன்று எந்த ஒரு விருப்பமும் எங்களது கட்சியில் கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் .
குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. தனியாா் இடத்தில் பெற்றோா்களின் அஜாக்கிரதையால் நடந்தது. அச் சம்பவத்தை உலகத்துக்கே தெரிவது போல் வெளிச்சம் போட்டு காட்டியதாக, குழந்தை மீட்பு குறித்து ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு அபத்தமானது. புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிக்கையாளா்கள் நலவாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும். புதுபடத்துக்கு சிறப்புக்காட்சி என்ற பெயரில் அரசு நிா்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கி விட்டு 2, 3 காட்சிகள் ஒளிபரப்ப முயன்ால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை . இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படும் என்றாா்.
அப்போது கோயில் அறங்காவலா் ரவிச்சந்திரன், சடகோப ராமனுஜ ஜீயா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.