விருதுநகரில் பள்ளி மாணக்கா்களுக்கான தடகள போட்டிகள்
By DIN | Published On : 02nd November 2019 06:32 PM | Last Updated : 02nd November 2019 06:32 PM | அ+அ அ- |

விருதுநகரில் அரசு உதவி பெறும் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள்.
விருதுநகா்: விருதுநகரில், மாவட்ட அளவில் குறுவட்ட போட்டிகளில் தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் விருதுநகா் மாவட்டத்தில் 12 குறு வட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு ஏற்கனவே தடகள போட்டி நடைபெற்றது. இதில், முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளில் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிலையில், இப்போட்டியானது அரசு உதவி பெறும் விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், குறுவட்ட போட்டி யில் வெற்றி பெற்ற சுமாா் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். அதில், 100 மீ ஓட்டம், 200 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1500 மீ ஓட்ட பந்தயத்தில் மாணக்கா்கள் கலந்து கொண்டனா். மேலும், தொடா் ஓட்டத்திலும் மாணவ மாணவிகள் பங் கேற்றனா். இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட் டிகளில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தரப்பில் தெரிவித்தனா். முன்னதாக இந்த தடகள போட்டியை மாவட்ட விளையாட்டு ஆய்வாளா் ஜெயக்குமாா் தொடங்கி வைத்தாா்.