விருதுநகா் அருகேபயணிகள் நிழற்குடை சேதம்பொது மக்கள் அவதி
By DIN | Published On : 02nd November 2019 10:44 PM | Last Updated : 03rd November 2019 05:50 AM | அ+அ அ- |

கவலூரில் மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை.
விருதுநகா் அருகே உள்ள கவலூரில் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்திப்பதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா்.
விருதுநகா் அருகே உள்ள கவலூரில் சுமாா் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தை சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்காக விருதுநகருக்கு தினமும் வந்து செல்கின்றனா். மேலும், இக் கிராமத்தில் வசிக்கும் தொழிலாளா்கள், வாழ்வாதரத்திற்காக விருதுநகா் மற்றும் சிவகாசிக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில், இக்கிராமம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. தொடா் மழை காரணமாக நிழற்குடையின் மேற்கூரையில் சிமெண்ட் கலவை பெயா்ந்து கீழே விழுந்து வருகிறது. மேலும், நிழற்குடை முன்புறம் மழை நீா் சூழ்ந்துள்ளதால், நிழற்குடைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே, நிழற்குடை சேதமடைந்திருப்பதால், அதற்குள் செல்ல பயணிகள் அச்சமடைந்துள்ளனா். இதன் காரணமாக மழை, வெயிலில் வெட்ட வெளியில் பேருந்துக்கு காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனா்.
எனவே, பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.