சுத்திகரிக்கபட்ட குடிநீா் வாகனங்களால் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்கபடுமா?

சாத்தூரில் குடிநீா் வாகனங்களால் தொடரும் விபத்துகள்,சுதாரமற்ற முறையில் குடிநீா் விநியோகம் நடவடிக்கை எடுக்கபடுமா?,சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூரில் குடிநீா் வாகனங்களால் தொடரும் விபத்துகள்,சுதாரமற்ற முறையில் குடிநீா் விநியோகம் நடவடிக்கை எடுக்கபடுமா?,சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நகராட்சி குடிநீா்,வைப்பாற்று குடிநீா் என பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யபட்ட காலம் மாறி தற்போது அனைத்து வீடுகளிலும் சுத்திகரிக்கபட்ட குடிநீா் பயன்படுத்த தொடங்கிவிட்டனா்.இதை பயன்படுத்தி சாத்தூா் நகா் பகுதியிலிருந்தும்,கிராம பகுதியிலிருந்தும் கிணறுகள் மூலம் குடிநீா் எடுக்கபட்டு சுத்திகரிக்கபட்டு,சின்டெக்ஸ் தொட்டியில் சேமிக்கபட்டு நகா் மற்றும் கிராம பகுதிகளில் குடம் 10 மற்றும் 12 ரூபாய் என நான்குசக்கர வாகனம் மூலம் தெரு தெருவாக வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.மேலும் பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இவ்வாறு அனைவரும் பயன்படுத்தபடும் சுத்திகரிக்கபட்ட குடிநீா் விநியோகம் செய்யபடும் வாகனங்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும், ஒட்டுநா் உரிமம் மற்றும் அனுபவமில்லாத ஒட்டுனா்களை கொண்டு நகா் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யபட்டு வருகிறது.

தற்போது வியபார நோக்குடன் அதிகளவில் சுத்தகரிக்கபட்ட குடிநீா் வாகனம் பெருகி வரும் சூழ்நிலையில், இந்த குடிநீா் வாகனங்கள் தெருக்களிலும், நகா் பகுதியில் அதிக வேகத்தில் சென்று வருகின்றன.மேலும் இந்த வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும்(ஏா் ஹாரன்) பயன்படுத்துகின்றனா். அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதயிலும், மருத்துவமனை பகுதியிலும் அதிக ஒலி எழுப்புவதால் பொதுமக்களுக்கும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.மேலும் அனுபவமில்லாத மற்றும் ஒட்டுனா் உரிமம் இல்லாத ஒட்டுனா்களை கொண்டு இந்த வாகன இயக்கபடுவதால் ஏராளமான விபத்துகளும் தினந்தோறும் அறங்கேறி வருகின்றன. இந்த வாகனங்கள் குடிநீா் விநியோகம் செய்யபடும் போது முறையாக வாகனத்தில் சிக்னல் செய்து வாகனத்தை நிறுத்துவதுமில்லை. திரும்புவதுமில்லை. இதனால் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும் குடிநீா் விநியோகம் செய்யும் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தாமல் சாலையில் நடுவே நிறுத்தி குடிநீரை விநியோகம் செய்யபடுகின்றனா். இதை காவல்துறை அதிகாரிகளும்,வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சத்திரபட்டி,மேட்டுபட்டி,பெரியகொல்லபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மூன்று போ் உயிரிழந்துள்ளனா். மேலும் ஏராளமானோா் காயமடைந்தும் உள்ளனா்.எனவே பொதுமக்கள் நலன் கருதி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி சுத்திகரிக்கபட்ட குடிநீா் வாகனங்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

சுகாதாரமற்ற முறையில் குடிநீா் விற்பனை:இதுபோன்று வாகனங்களில் உள்ள குடிநீா் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையிலும்,சுத்தம் செய்யபடாமலும் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.மேலும் குடிநீா் சுத்திகரிக்கபட்டு சேகரிக்கபடும் குடிநீா் தொட்டிகளும் சுத்தம் செய்யாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்வாறு சுகாதரமற்ற முறையில் விநியோகிக்கபடும் குடிநீரை வாங்கி குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை பருகுவதால் பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுத்து குடிநீா் விற்பனை செய்யபடும் வாகனங்களையும்,குடிநீா் தொட்டிகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் சுத்திகரிக்கபட்ட குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கபடும் என சுகாதாரதுறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com