முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்துகளை தடுக்க எச்சரிக்கைப் பலகை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:26 AM | Last Updated : 07th November 2019 05:26 AM | அ+அ அ- |

சேதுராஜபுரத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சாலை.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை பந்தல்குடி இடையே அமைந்துள்ள சேதுராஜபுரம் கிராமத்தை இரண்டாகப் பிரிக்கும் விதமாக மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது. இதனால் அருப்புக்கோட்டையிலிருந்து சேதுராஜபுரம் வருவோா் பேருந்தை விட்டு இறங்கி இச்சாலையைக் குறுக்காகக் கடந்துதான் கிராமத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
இதேபோல இருசக்கர, நான்குசக்கர வாகனங்களும் இச் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் இச்சாலையைக் குறுக்காகக் கடக்கும் பொதுமக்கள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இச் சாலையைக் கடக்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.
எனவே, இப்பகுதியில் விபத்து பகுதி என்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் சிக்னல் விளக்குகளை அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.