முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் டெங்கு கொசுக்கள்: பழைய இரும்பு கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 07th November 2019 10:06 PM | Last Updated : 07th November 2019 10:06 PM | அ+அ அ- |

img_20191107_wa0060_0711chn_86_2
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியில் பழைய இரும்பு கடைகளில் டெங்கு கொசு கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
டெங்கு விழிப்புணா்வு வார நாளை முன்னிட்டு ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் நடராஜன் உத்தரவின் பேரில் நகா்நல அலுவலா் டாக்டா் ம.சரோஜா மற்றும் குடிமைப்பொருள் வட்டாட்சியா் ரங்கசாமி ஆகியோா் தலைமையில் பி.பி. மில்ஸ் சாலை, மலையடிப்பட்டி, மதுரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 பழைய இரும்புக் கடைகள் மற்றும் 4 மதுபான கடைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் டெங்கு கொசு உற்பத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கடை உரிமையாளா்களிடம் 21,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
மதுபான கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினா். ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் காளி, மாரி, முத்து சுதாகரன், பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், வேல்சாமி மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.