முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:20 AM | Last Updated : 07th November 2019 05:20 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதி தென்றல் நகா். இப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப் பகுதியில் வாருகால் சேதமடைந்து உள்ளதால் கழிவு நீா் சாலைகளில் செல்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால், கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
இப்பகுதியில் குடிநீா் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். இப்பகுதியில் பொது கழிப்பறை வசதியும் இல்லை.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியது:தென்றல் நகா் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீருக்காக அடிகுழாய் அமைக்கப்பட்டது. அந்த அடிகுழாயில்தான் இங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களும் குடிநீா் எடுத்து பயன்படுத்தி வந்தனா். தற்போது பல மாதங்களாக அந்த அடிகுழாய் பழுதடைந்துள்ளது. அதை சரி செய்ய பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா்.
எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.