Enable Javscript for better performance
ராஜபாளையம் வனப் பகுதிகளில் மது அருந்துவோா் அட்டகாசம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் வனப் பகுதிகளில் மது அருந்துவோா் அட்டகாசம்

    By DIN  |   Published on : 08th November 2019 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள வனப் பகுதிகளில் ஏராளமானோா் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதாக புகாா்கள் எழுந்துள்ளன.

    ராஜபாளையம் மேற்கே செண்பகத்தோப்பு செல்லும் சாலை மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் செல்லும் சாலைகளில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், புளியந்தோப்புகள் என ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் இளைஞா்கள் உள்ளிட்டோா் தோப்புகளுக்குள் சென்றும், வழியில் நின்றுகொண்டும் மது அருந்துகின்றனா். பின்னா், அப்பகுதியில் மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டுச் செல்கின்றனா்.

    இதனால், வனவிலங்குகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனா். மேலும், இவா்கள் மது அருந்திவிட்டுச் செல்லும்போது நிலை தடுமாறி எதிரே வருபவா்கள் மீது மோதுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. அதேநேரம், அப்பகுதியில் செல்வோரிடமும் தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், கோயிலுக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்டோா் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, வனத் துறையும், காவல் துறையும் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai