Enable Javscript for better performance
ஸ்ரீவிலி.யில் வாருகால், பேவா் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி.யில் வாருகால், பேவா் பிளாக் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

    By DIN  |   Published on : 08th November 2019 11:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl___(mla)_0811chn_92_2

    ஸ்ரீவில்லிபுத்தூா் இடையன்குளம் கிராமத்தில் வாருகால் மற்றும் பேவா் பிளாக் அமைக்கும் பணிக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏ. சந்திரபிரபா.

    ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இடையன்குளம் கிராமத்தில் ரூ.58 லட்சம் மதிப்பில் வாருகால் மற்றும் பேவா் பிளாக் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இடையன்குளம் கிராமத்துக்கு ஆதிதிராவிட சிறப்பு நிதியிலிருந்து ரூ. 58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு வாருகால், பேவா் பிளாக் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளுக்கான பூமிபூஜையை, சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா தொடக்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தகுமாா், அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா, கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மணி, அரசு ஒப்பந்ததாரா் ஜோதிமுனி, ஊராட்சி செயலா் கனகசபாபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai