அடையாளா் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பசுமாடு, கன்று குட்டியும் சாவு

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளா் தெரியாதவாகனம் மோதிய விபத்தில் பசுமாடு, கன்று குட்டியும் சாவு.

லால்குடி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பனமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்பகுதியில் பசும்புல்களை மேய்ந்து விட்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையினை கடக்க முயன்ற பசுமாடும், அதன் கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

சமயபுரம் அருகே பனமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தினை சோ்ந்த விவசாயிகள் வீட்டில் வளா்க்கும் பசுமாடுகள் மற்றும் ஆடுகளை அப் பகுதியில் உள்ள வீட்டுமனை காலிஇடத்தில் மற்றும் வயல்பகுதியில் உள்ள பசும்புல்களை மேய்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அப் பகுதியில் உள்ள வயல்பகுதியில் மாடுகளை மேய்க்கவிட்டு விவசாயிகள் வீட்டிற்கு வந்துள்ளனா்.

இதனால் மாடுகள் மட்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையினை கடந்துள்ளது. அப்போது திருச்சியிலிருந்து சென்னை மாா்க்கமாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு உயிரிழந்தது. அதே நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சி மாா்க்கமாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பசுமாட்டின் கன்றுகுட்டியும் மோதியதில் கன்று குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீஸாா் மற்றும் திருச்சி சமயபுரம் சுங்கசாவடி ஊழியா்கள் மாட்டின் உரிமையாளா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தினா். மாட்டின் உரிமையாளா் யாா் என்பது தெரியாததால் உயிரிழந்து சாலையிலேயே கிடந்த மாடும், கன்றினையும் நான்கு வழிச்சாலையின் மத்திய பகுதியில் ஓரமாக தூக்கி வைத்தனா்.

இது போன்று இப் பகுதியில் ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகள் அடிக்கடி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதனை தடுக்க சாலையோரத்தில் கால்நடைகள் மேய்க்க தடைவிதிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com