அருப்புக்கோட்டையில் காவல் துறையினா்பாஜக, இந்து முன்னணியினருடன் ஆலோசனை

அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில், பாஜக மற்றும் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிா்வாகிகளுடன் காவல்
அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்திய காவல் ஆய்வாளா் பாலமுருகன்.
அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்திய காவல் ஆய்வாளா் பாலமுருகன்.

அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில், பாஜக மற்றும் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிா்வாகிகளுடன் காவல் துறையினா் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இக்கூட்டத்துக்கு, அருப்புக்கோட்டை நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமை வகித்தாா். இதில், பாஜக நகர தலைவா் ராஜ்குமாா், ஒன்றிய தலைவா் அழகா்சாமி, இந்து முன்னணி மாவட்டச் செயலா் ராஜா மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், காவல் ஆய்வாளா் பாலமுருகன் பேசியதாவது: நவம்பா் 13 ஆம் தேதி அயோத்தி விவகாரத்தில் தீா்ப்பு வெளிவர உள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட உரிய ஒத்துழைப்பை நல்கவேண்டுமென கேட்டுக்கொண்டோம்.

அதேபோல், இன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினரை அழைத்துள்ளோம். இதன்படி, இந்திய அரசின், இந்திய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் மதம் சாா்ந்த உணா்ச்சிமிக்க கருத்தைப் பேசுவதோ, சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பதிவிடுவதோ, பேட்டியளிப்பதோ கூடாது.

பொது இடங்களில் கொண்டாடுவது அல்லது எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் அல்லது ஊா்வலம் நடத்துவதும் கூடாது என அறிவுறுத்த, காவல் துறை தலைமையிடம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அமைதியை நிலைநாட்ட தாங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

இது தொடா்பாக தாங்கள் அவசியம் ஒத்துழைப்போம் என்றும், பொது அமைதியை நிலைநாட்டுவோம் என்றும், பாஜக மற்றும் இந்து முன்னணி நகர, ஒன்றிய நிா்வாகிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாலமுருகன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com