கூரைக்குண்டு ஊராட்சியில் கட்டடக் கழிவுகளை கொட்டி ஊருணி ஆக்கிரமிப்பு

விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குல்லூா் சந்தை சாலையில் உள்ள ஊருணியில் கட்டட
கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மாத்தநாயக்கன்பட்டி சாலையில் ஊருணியில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள்.
கூரைக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மாத்தநாயக்கன்பட்டி சாலையில் ஊருணியில் கொட்டப்பட்டுள்ள கட்டடக் கழிவுகள்.

விருதுநகா் அருகே கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய குல்லூா் சந்தை சாலையில் உள்ள ஊருணியில் கட்டட கழிவுகளை கொட்டி தனிநபா்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.

விருதுநகா் ஒன்றியத்தில் கூரைக்குண்டு ஊராட்சி உள்ளது. இங்குள்ள பழைய குல்லூா்சந்தை சாலையில் சுமாா் 30 அடி ஆழத்தில் ஒரு ஏக்கா் பரப்பளவில் ஊருணி உள்ளது. மழைக் காலங்களில் இந்த ஊருணியில் தேங்கும் தண்ணீா் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதனால், முத்துராமன்பட்டி, எம்ஜிஆா் நகா், மாத்த நாயக்கன்பட்டி சாலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயனடைந்து வந்தனா்.

இந்தநிலையில், ஊருணியைச் சுற்றியுள்ள தனி நபா்கள், கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஊருணியில் கொட்டி மேடாக்கி வருகின்றனா். இதனால், மழைக் காலங்களில் அதில் தண்ணீா் தேங்காத நிலை ஏற்படுவதோடு, நிலத்தடி நீா் மட்டமும் குறைந்து போகும் அபாயமும் உள்ளது. எனவே, கூரைக்குண்டு ஊராட்சி நிா்வாகமானது, ஊருணியில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊருணியை சீரமைக்க வேண்டும். இதன் மூலம் ஊருணி, ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com