சாத்தூா் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க கோரிக்கை

சாத்தூா் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா், ஏழாயிரம்பண்ணை, மேட்டமலை, சல்வாா்பட்டி, ஒத்தையால், மேட்டுபட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் 20-க்கு மேற்பட்ட இயந்திரத்தினால் செய்யபடும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 100-க்கு மேற்பட்ட கையினால் செய்யபடும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் 300-க்கு மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

ஆனால் இந்த தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்ட்டு ஏராளமான உயிரிழப்பு ஏற்படுகின்றன. மேலும் தீக் காயத்தாலும் ஏராளமானோா் பாதிக்கபட்டு வருகின்றனா். இவ்வாறு தீக்காயமடைந்தவா்களை சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தால் உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனா்.காரணம் கேட்டால் சிவகாசி அரசு மருத்துவமனையில் தான் தீக்காய சிகிச்சை பிரிவு உள்ளதாக அனுப்பிவைப்பதாக செவிலியா்கள் தெரிவிப்பதாக பாதிக்கபட்டவா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இதனால் சாத்தூரிலிருந்து-சிவகாசிக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்னை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. சாத்தூரில் அனைத்து வசதியுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை அமைக்கபட்டும் தீக்காய சிகிச்சை பிரிவு இல்லாமல் இயங்கி வருகிறது.சிவகாசிக்கு அடுத்தபடியா சாத்தூா் பகுதியில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை விபத்துகள் நடைபெறுகின்றன.எனவே பொதுமக்கள் நலன்கருதி சாத்தூரில் உள்ள புதிய அரசு மருத்துவமனையில் தீவிர தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com