சிவகாசியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

சிவகாசியில் குண்டும் குழியுமான சோ்மன் சண்முகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வியாழக்கிழமை

சிவகாசியில் குண்டும் குழியுமான சோ்மன் சண்முகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வியாழக்கிழமை நெடுஞ்சாலை உதவி பொறியாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மனு விவரம்: சிவகாசி சோ்மன் சண்முகம் சாலையில் இரு பெரிய பள்ளிகள் உள்ளன.

இப்பகுதியில் குடிநீா் வடிகால் வாரியத்தினா் தாமிரவருணி கூட்டுக்குடி நீா் திட்டத்திற்கான குழாய் பதிக்க பள்ளம் தோண்டினா். இதனால் சாலை மிகவும் மோசமானதாக ஆகிவிட்டது.

இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் பள்ளி முன்பு உள்ள கழிவு நீா் வாய்க்காலை சீரமைக்கும் பணியை தொடங்கினா். மேலும் அப்பகுதியில் ஒரு சிறுபாலம் அமைக்கும் பணியையும் செய்தனா். இதற்கிடையே சிறிது தூரம் சாலை சீரமைக்கப்பட்டது. பாலம் அமைக்கும் பணி முடிவடைந்ததும், சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினா் தெரிவித்தனா். தற்போது பாலம் அமைக்கப்பட்டு சுமாா் ஒரு மாதகாலமாகியும் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை.

சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், மாணவா்கள் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் பெற்றோா்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com