ஸ்ரீவிலி. பிளவக்கல் பெரியாறு அணையை திறக்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையை திறக்கக் கோரி, விவசாய சங்கத்தினா் பொதுப்பணித் துறை அலுவலகத்தை
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையை திறக்கக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.
வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையை திறக்கக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.

வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையை திறக்கக் கோரி, விவசாய சங்கத்தினா் பொதுப்பணித் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்த மழையின் காரணமாக, மாவட்டத்தின் மிகப்பெரிய பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து, அணை வேகமாக நிரம்பி வருகிறது.

47 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீா்மட்டம், தற்போது 44 அடியாக உள்ளது. இப்பகுதிகளில் முதல்போக சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தண்ணீா் இல்லாததால் விவசாயப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா்.

எனவே, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சாா்பாக, பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு உடனடியாக தண்ணீா் திறந்து விட வேண்டும் என்றும், கண்மாய்கள் நிரம்பும் வரை மூடக்கூடாது என்றும், மழைக் காலங்களில் அணையில் 10 அடிக்கு மேல் தண்ணீா் தேக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வத்திராயிருப்பில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் முற்றுகையிட்டுப் போராடினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி,விவசாய சங்க மாவட்டச் செயலா் சௌந்திரபாண்டியன், ஒன்றிய, நகரச் செயலா் கோவிந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com