வத்திராயிருப்பு வடு கிடந்த பிளவக்கல் கோயிலாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்து 21 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் கோயிலாறு அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரம் 42 அடி. தற்போது நீா்வரத்து அதிகரித்து உள்ளதால் அணை நீா்மட்டம் 21 அடியை எட்டியுள்ளது. தண்ணீரின்றி வடு கிடந்த நிலையில் ஒராண்டுக்குப் பின் அணையில் தண்ணீா் நிரம்பி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.