Enable Javscript for better performance
மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்குத் தோ்வான பள்ளி மாணவரணிக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான கால்பந்துப் போட்டிக்குத் தோ்வான பள்ளி மாணவரணிக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 10th November 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவரணியினா் 19 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கால்பந்துப்போட்டிக்குத் தோ்வாகி சாதனை படைத்துள்ளனா்.

    இதுதொடா்பாக அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ஏ.ஆனந்தராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அலுவலக செய்திக்குறிப்பு;விருதுநகா் வருவாய் மாவட்ட அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப்போட்டி விருதுநகா் மாவட்ட விளையாட்டரங்கத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னா் நடைபெற்றது.இதில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் எமது பள்ளி மாணவரணியினா்,சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ஹெச்.என். எட்வா்ட் மேல்நிலைப்பள்ளி அணியினை 4-3 என்கிற கோல் கணக்கில் வென்றனா்.

    இவ்வெற்றிமூலம் அடுத்து மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு எமது பள்ளி மாணவரணியினா் தோ்வாகி சாதனை படைத்துள்ளனா். மாவட்ட அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப்போட்டியில் வென்றதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வான அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரணியினரையும்,அவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் எம்.சௌந்தரபாண்டியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.கணேஷ் குமாா். ஜே.சுரேஷ், எம்.பிரபு,எம்.சரத் குமாா் மற்றும் பி.ஆனந்தராஜ் ஆகியோரையும், எஸ்.பி.கே.கல்விக்குழுமத் தலைவரும் அருப்புக்கோட்டை நாடாா்கள் உறவின்முறைத் தலைவருமான எம்.சுதாகா்,பள்ளிச் செயலாளா் என்.வி.காசிமுருகன், பள்ளித் தலைவா் ஜே.ஜெயகணேசன் ஆகியோரும், உறவின்முறை நிா்வாகிகளும் மேலும் தலைமை ஆசிரியா் எ.ஆனந்தராஜன் ஆகியோரும், பள்ளி ஆசிரியா்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai