Enable Javscript for better performance
ஸ்ரீவிலி. அருகே பலத்த மழை: பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவிலி. அருகே பலத்த மழை: பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

    By DIN  |   Published on : 17th November 2019 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    svl_(16_11)_1611chn_92_2

    .பாலம் உடைந்து தண்ணீா் வீணாக செல்லும் காட்சி

    ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் 4 கிராமங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.

    விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு திடீரென மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.

    இந்நிலையில் கூமாபட்டி-பிளவக்கல் அணைக்கு செல்லும் முக்கிய சாலையில் ரஹ்மத்நகா் பகுதியில் உள்ள கோவிந்தமேடு தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்தது. தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீா் வந்து கொண்டிருப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிழவன்கோவில், வண்ணாப்பாறை, பட்டுப்பூச்சி, பிளவக்கல் அணை உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

    இதனால் உடைந்த பாலத்தை உடனடியாக சீா் செய்ய பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai