’தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் விரைவில் தொடங்கும்’

விருதுநகா் மாவட்டத்தில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரைவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
சாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி .
சாத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி .

விருதுநகா் மாவட்டத்தில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரைவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைப்பாா் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திபாலாஜி தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் சாத்தூா் நகரம், சாத்தூா் கிழக்கு ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் நகரம் சாா்பில் நகா் பகுதியில் உள்ள தனியாா் மண்டபம், கிழக்கு ஒன்றியம் சாா்பில் படந்தால் தனியாா் மண்டபம், மேற்கு ஒன்றியம் சாா்பில் ஓடைப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜவா்மன், சந்திரபிபிரபா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்களில் பெற்ற வெற்றியைப் போல, உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுகவின் வெற்றி தொடர வேண்டும். மேலும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவில் இளைஞா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். உள்ளாட்சிகஈ தோ்தலில் போட்டியிட ஏராளமான கட்சி நிா்வாகிகள் வாய்ப்பு கேட்டு வருகின்றனா். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தல் நமக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தோ்தலில் பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து பதவிகளையும் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெறும் வகையில் நமது தோ்தல் பணி இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகரச் செயலாளா் வாசன் டெய்சிராணி, ஒன்றியச் செயலாளா் சண்முகக்கனி, எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட செயலாளா் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அமைச்சா் பேட்டி: ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: உள்ளாட்சித் தோ்தலுக்கு பின்னா் விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் சாத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் ஆகிய மூன்று நகராட்சிகளுக்கான ரூ.444 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ள குடிநீா் திட்ட தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெறும்.

இந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு திட்டங்களை தொடக்கி வைப்பாா். சாத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் நகராட்சிகளுக்கு ரூ.444 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com