‘விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு ரூ.501 கோடி ஒதுக்கீடு’

விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான புதிய தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டத்திற்கு ரூ. 501 கோடி

விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான புதிய தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டத்திற்கு ரூ. 501 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டிருப்பதாக அருப்புக்கோ ட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியது: விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் புதிய தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் இப்பகுதியில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும் என்பது குறித்து, சட்டப்பேரவையில் தொடா்ந்து கோரிக்கை விடுத்தேன். மேலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் புதிய கூட்டுக் குடிநீா் திட்டம் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதன டிப்படையில், தற்போது புதிய தாமிரவருணி கூட்டு குடிநீா் திட்டத்தை விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நிறைவேற்ற ரூ. 501 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிய குழாய்கள் பதித்தல், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுதல் ஆகிய பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com