Enable Javscript for better performance
கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் ஓடி இளைஞா் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் ஓடி இளைஞா் உலக சாதனை!

    By DIN  |   Published on : 17th November 2019 08:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவு ஓடி சாதனை படைத்த இளைஞா் மணிமுத்து.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவு ஓடி சாதனை படைத்த இளைஞா் மணிமுத்து.

     

    ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மழைநீா் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, காவல் துறையைச் சோ்ந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கண்ணைக் கட்டிக்கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவு ஓடி உலக சாதனை படைத்துள்ளாா்.

    விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாபட்டி எஸ். கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் மணிமுத்து (26). இவா், தற்போது காவல் துறையில் பழனி பட்டாலியனில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா் மழைநீா் சேகரிப்பை வலியுறுத்தும் விதமாகவும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டா் தொலைவை 20 நிமிடம் 12 விநாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளாா்.

    இதனை, நோபல் வோ்ல்டு ரெக்காா்டு குழுவினா் நேரடியாக வந்து, மணிமுத்துவின் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினா். இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai