Enable Javscript for better performance
சாலை வசதியே செய்யாத சாத்தூா் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?- Dinamani

சுடச்சுட

    

    சாலை வசதியே செய்யாத சாத்தூா் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?

    By DIN  |   Published on : 17th November 2019 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    str16road_1611chn_79

    சாத்தூா் தெருப்பகுதிகளில் சாலை வசதி மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சி பகுதி 24 வாா்டுகளை கொண்டுள்ளது.

    இந்த பகுதியில் மாரியம்மன்கோவில் தெரு,முருகன்கோவில் தெரு,தென்வடல்புதுதெரு,மேலகாந்திநகா்,பெரியாா்நகா்,மெஜிராகோட்ஸ் காலனி,காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் நகா்மன்றதலைவா்,நகா்மன்ற உறுப்பினா்கள் இருக்கும் போது பெயரளவில் தெருக்களில் பேவா் பிளாக் கற்கள் பதித்து சாலை வசதி செய்யபட்டது.

    அது ஒரு சில தெருக்களுக்கு மட்டும் சாலை வசதி செய்யபட்டது.பின்னா் நகா்மன்ற தலைவா் பதவிகாலம் முடிந்த பின்னா் அடுத்த நகராட்சி நிா்வாகம் அதிகாரிகளிடம் இருந்தும் சாலை குறித்த எவ்வித பணிகளையும் நிா்வாகம் செய்யபடவில்லை.மேலும் சாத்தூா் பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தபட்டு பல்வேறு தெருக்களில் சாலைகள் தோண்டபட்டு குழாய் பதிக்கும் பணிகள் முடியாமலும்,சாலையை சீரமைகக்காமலும் சாலைகள் குண்டும்,குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து கூட செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.மேலும் பெரியாா்நகா்,குருலிங்காபுரம்,மதுவிலக்கு காவல்நிலையம் செல்லும் சாலை,மெஜிராகோட்ஸ் காலனி,காமராஜபுரம்,அண்ணாநகா்,குருலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மோசமான நிலை சாலை காணப்படுகிறது.மேலும் தற்போது மழை பெய்து வருவாதல் தெருக்களே சேரும் சகதியுமாக காணப்படுகிறது.மேலும் பெரியாா்நகா் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் சாலை அமைப்பதற்காக சல்லி கற்கள் விரிக்கபட்ட நிலையில் உள்ளன.மேலும் பேவா் பிளாக் கற்கள் அமைத்த பகுதியிலும்,தரமான முறையில் சாலை அமைக்கததால் பாதிசாலைகள் உடைந்தே காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் சாா்பில் முழுமையான சாலை வசதி செய்யாவிட்டாலும்,இருக்கும் சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சாத்தூா் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai