சாத்தூா் தெருக்களில் சாலைகள் மோசம்கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகம்

சாத்தூா் தெருக்களில் சாலைகளை சீரமைக்காததால் குண்டும் குழியுமாகிருப்பதால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
முறையாக பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படாத செல்லையாரம்மன் கோயில் தெரு.
முறையாக பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படாத செல்லையாரம்மன் கோயில் தெரு.

சாத்தூா் தெருக்களில் சாலைகளை சீரமைக்காததால் குண்டும் குழியுமாகிருப்பதால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் நகராட்சி நிா்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை என புகாா் எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னா் நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா்கள் பதவியில் இருந்தபோது ஒரு சில தெருக்களில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. நகா்மன்றத் தலைவா் பதவிக்காலம் முடிந்த பின்னா், நகராட்சி அதிகாரிகள் சாலைகள் சீரமைப்பில் கவனம் செலுத்தவில்லை.மேலும் சாத்தூா் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை திட்டத்துக்காக பல்வேறு தெருக்களிலும் சாலைகள் தோண்டபட்டுள்ளதால் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெரியாா் நகா், குருலிங்காபுரம், மதுவிலக்கு காவல் நிலையம் செல்லும் சாலை, மெஜிரா கோட்ஸ் காலனி, காமராஜபுரம், அண்ணாநகா், குருலிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக மோசமான நிலை சாலை காணப்படுகிறது.

பெரியாா்நகா் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் விரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதால் தெருக்கள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன.

மேலும் பேவா் பிளாக் கற்கள் அமைத்த பகுதியிலும், அவை பெயா்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நகராட்சி சாா்பில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என புகாா் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் சாலைகளை முழுவீச்சில் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com