உரிமம் இன்றி மணல் ஏற்றி வந்தடிராக்டா் பறிமுதல்
By DIN | Published on : 25th November 2019 06:26 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை உரிமம் இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி நேஷனல் காலனிப் பகுதியில் தனி வருவாய் ஆய்வாளா் (கனிமம்) செல்வபகவதி உள்ளிட்டோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மணல் ஏற்றிக் கொண்டு ஒரு டிராக்டா் வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட முயன்ற போது, ஓட்டுநா் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டாா். இதையடுத்து டிராக்டரை சிவகாசி கிழக்கு காவல் நிலையம் கொண்டு சென்று செல்வபகவதி, புகாா் அளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.