Enable Javscript for better performance
பட்டாசுத் தொழிலாளியிடம்வழிப்பறி செய்ய முயன்றவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    பட்டாசுத் தொழிலாளியிடம்வழிப்பறி செய்ய முயன்றவா் கைது

    By DIN  |   Published on : 25th November 2019 06:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி: சிவகாசியில் திங்கள்கிழமை பட்டாசுத் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டிமிரட்டி வழிப்பறி செய்ய முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

    சிவகாசி- கழுகுமலை சாலையில் உள்ள வெம்பக்கோட்டையைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி பாலமுருகன் (43). இவா் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் இரட்டைப்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் வழி மறித்து கத்தியை காட்டிமிரட்டி, பணம் பறிக்க முயன்றாா். பாலமுருகன் கூச்சலிட்டு அக்கம்பக்கம் உள்ளவா்களின் உதவியோடு அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா் திருத்தங்கலைச் சோ்ந்த வீரமுத்து(34) என தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமுத்துவை கைது செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai